பிரதமர் மோடியை கொல்ல சதி மாவோயிஸ்டு கடிதத்தில் கூறி இருப்பது என்ன? மும்பை போலீஸ் அம்பலப்படுத்தியது
பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டிய மாவோயிஸ்டு கடிதத்தில் கூறி இருப்பது என்ன? என்பதை மும்பை போலீஸார் அம்பலபடுத்தியுள்ளனர்.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைதான டெல்லியை சேர்ந்த ரோனா வில்சன் என்பவர் மாவோயிஸ்டு தலைவர் ஒருவருக்கு எழுதிய இ-மெயில் (மின் அஞ்சல்) சிக்கியது. அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதை இப்போது மும்பை போலீஸ் அம்பலப்படுத்தி உள்ளது.
அந்த கடிதத்தில், “ராஜீவ் காந்தி பாணி சம்பவம் போன்று நடத்தி (பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கொலை செய்தது), மோடி ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இதற்கு கையெறி குண்டு லாஞ்சர்கள் வாங்குவதற்கு பணம் தேவை” என கூறப்பட்டு உள்ளது.
நாட்டில் நடமாடிக்கொண்டு இருக்கிற மாவோயிஸ்டுகளும், பதுங்கி வாழ்கிற மாவோயிஸ்டுகளும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட ஆயிரக்கணக்கான கடிதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இப்போது கைது செய்யப்பட்டு உள்ள மாவோயிஸ்டுகள், அத்தனைபேரின் கவனத்தையும் கவருகிற விதத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவது பற்றி அந்த கடிதங்களில் கூறி உள்ளனர்.
இந்த தகவல்களை மும்பையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்பீர் சிங், நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story