அஞ்சலக பேமண்ட் வங்கி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


அஞ்சலக பேமண்ட் வங்கி சேவையை  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 Sept 2018 4:36 PM IST (Updated: 1 Sept 2018 4:36 PM IST)
t-max-icont-min-icon

அஞ்சலக பேமண்ட் வங்கி சேவையை பிரதமர் மோடி டெல்லியில் துவங்கி வைத்தார்.

புதுடெல்லி,

 நாட்டில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேமண்ட் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் வங்கிச் சேவையில் அஞ்சலக பேமண்ட் வங்கிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். 

இந்த பேமண்ட் வங்கிகளில் சேமிப்பு, நடப்பு கணக்கு தொடங்குதல், பணப் பரிமாற்றம், அரசின் நேரடி மானியங்களைப் பெறுதல், பல்வேறு கட்டணங்களைச் செலுத்துதல், கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு மின்னணு முறையில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளைப் பெற முடியும். இது தொடர்பான செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

ஏற்கெனவே, ஏர்டெல், பே-டிஎம் ஆகிய நிறுவனங்கள் பேமண்ட் வங்கி சேவையில் முன்னிலையில் உள்ளன. அவற்றுக்கு அஞ்சலக பேமண்ட் வங்கியும் ஈடுகொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அஞ்சலக பேமண்ட் வங்கிக்கு கூடுதலாக ரூ.635 கோடியை மத்திய அரசு இரு நாள்களுக்கு முன்பு ஒதுக்கியது.

இந்தநிலையில்,   டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில்  இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய அஞ்சலக வங்கி தொடக்க விழாவில் சுமார் 50,000 கணக்குகள் தொடங்கப்பட்டன.

 அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை நாட்டின் உள்ள ஓவ்வொரு மூளையிலும் கொண்டு செல்வோம்.  ஓவ்வொரு வீட்டுவாசலிலும் அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை கிடைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

IPPB என்று சுருக்கமாக அழைக்கப்படும் இத்திட்டம் மூலம் நாட்டின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

Next Story