காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படை தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படை தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 1 Sept 2018 9:17 PM IST (Updated: 1 Sept 2018 9:17 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே பந்திபோரா மாவட்டத்தில் தன்னா பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.  இதில் தீவிரவாதிகளுக்கும் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  தீவிரவாதிகளுடனான மோதல் முடிவுக்கு வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.


Next Story