பா.ஜ.க. எம்.பி. மாடு முட்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
பாரதீய ஜனதா எம்.பி. வகேலா மாடு முட்டியதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அங்கு தெருவில் சுற்றி திரிந்த பசு ஒன்று இவரை முட்டி தாக்கியுள்ளது. தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட அவர் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் அவருக்கு இரு இடுப்பு எலும்புகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து காந்தி நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வகேலா சேர்க்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதற்கு அதிக சிரமம் உள்ளது என கூறிய அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story