பிஎன்பி மோசடி முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள்தான் - அதிகாரிகள்


பிஎன்பி மோசடி முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள்தான் - அதிகாரிகள்
x
தினத்தந்தி 2 Sept 2018 9:35 PM IST (Updated: 2 Sept 2018 9:35 PM IST)
t-max-icont-min-icon

பிஎன்பி மோசடியில் மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது.


புதுடெல்லி, 
 
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். 

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது. 

மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திய விசாரணை முகமைகள் மேற்கொண்ட முயற்சியில் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்தது. இதனையடுத்து மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக நடவடிக்கையையும் சிபிஐ தொடங்கியது. இதில் முக்கிய நகர்வாக தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு கோரிக்கையை முன்வைத்தது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு இரு நோட்டீஸ்களை நீதிமன்றத்தில் சமர்பித்தது. நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷியை பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய ரூ. 3,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டது.
 
இதனையடுத்து நிர்வ மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி முறையே செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் விடுத்தது. 
 
இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. 

இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.  இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.


Next Story