அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசாக்கள் உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசாக்கள் உயர்ந்து ரூ.70.77 ஆக உள்ளது.
மும்பை,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளி கிழமை 26 பைசாக்கள் சரிவடைந்து ரூ.71 ஆக இருந்தது. இறக்குமதியாளர்களுக்கு மாத இறுதியை தொடர்ந்து அமெரிக்க டாலர் அதிகளவில் தேவைப்பட்ட நிலையிலும் மற்றும் பொருளாதார காரணிகள் மோசமடைந்த நிலையிலும் இந்த நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவிலிருந்து மீண்டு 23 பைசாக்கள் உயர்வடைந்து ரூ.70.77 ஆக உள்ளது.
இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 289.28 புள்ளிகள் உயர்ந்து 38,934.35 புள்ளிகளாக உள்ளன.
Related Tags :
Next Story