தேசிய செய்திகள்

சுவீடன் நிறுவன கடையில் வாங்கிய பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் புகார்; அபராதம் விதிப்பு + "||" + IKEA's Veg Biryani Came With A Side Of Worm, Says Man; Company Fined

சுவீடன் நிறுவன கடையில் வாங்கிய பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் புகார்; அபராதம் விதிப்பு

சுவீடன் நிறுவன கடையில் வாங்கிய பிரியாணியில் புழு:  வாடிக்கையாளர் புகார்; அபராதம் விதிப்பு
ஆயிரம் பேர் அமர கூடிய மிக பெரிய முதல் சுவீடன் நிறுவன கடையில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்தது என வாடிக்கையாளர் புகார் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

சுவீடன் நாட்டை சேர்ந்த ஐ.கே.ஈ.ஏ. என்ற பர்னிச்சர் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஐதராபாத் நகரில் பிரியாணி கடை ஒன்றை தொடங்கியுள்ளது.  சுவீடன் மற்றும் இந்திய உணவு வகைகள் கிடைக்க கூடிய ஓராயிரம் பேர் அமர கூடிய வகையில், மிக பெரிய அளவில் தொடங்கப்பட்ட இந்த கடையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் பிரியாணி வாங்கி சென்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அபீத் முகமது என்ற வாடிக்கையாளர் டுவிட்டரில், எனக்கு கிடைத்த வெஜிடபிள் பிரியாணியில் கூட்டுப்புழு ஒன்று கிடந்தது என புகைப்படம் வெளியிட்டு புகாராக தெரிவித்துள்ளார்.

அவர், ஐதராபாத் காவல் துறை, தெலுங்கானா நகராட்சி மற்றும் நகர் வளர்ச்சி துறை மந்திரி ராமாராவ் மற்றும் ஐ.கே.ஈ.ஏ. ஐதராபாத் நிறுவனம் ஆகியவற்றையும் தனது டுவிட்டர் பதிவில் டேக் செய்துள்ளார்.

இதனால் வாடிக்கையாளர்கள் பலர் பிரியாணி நிறுவனத்திற்கு டுவிட்டர் வழியே கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பிளாஸ்டிக் கவர்கள் உபயோகம் தொடர்புடைய விதிகளின்படி, பிரியாணி நிறுவனத்திற்கு ₹.11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.  நோட்டீஸ் ஒன்றும் அளிக்கப்பட்டு உள்ளது.  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று உணவு பொருட்களில் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம் இதுபற்றி விசாரித்து உடனடியாக சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...