ரூபாய் நோட்டுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்? அச்சத்தை போக்க வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ரூபாய் நோட்டுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்? அச்சத்தை போக்க வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:08 PM IST (Updated: 3 Sept 2018 3:08 PM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சத்தை போக்க மத்திய மந்திரி உத்தர விட வேண்டும் என்று வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் புழங்கும் ரூபாய் நோட்டுகளில் மாசு பட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.  இந்த பிரச்சனையில் உடனடியாக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று  அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் புழங்கும்  ரூபாய் நோட்டுக்களில் உள்ள மாசுக்களால்  சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. 

இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இந்த தகவல் உண்மையானது என்றால், அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள் வர்த்தக துறையிலேயே புழங்குவதால் வர்த்தகர்கள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களும் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடம்.   அதனால் இந்திய மருத்துவ கழகம், ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும். அதனை தடுக்கும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜினோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெனோமிக்ஸ்  சேர்ந்த உயிரியலில் விஞ்ஞானிகள்,  ரூபாய் நோட்டுகளில் குறைந்தபட்சம் 78 நோய்களைக் கொண்ட DNA அடிச்சுவடுகளின் தடயங்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ரூபாய் நோட்டுகளால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் பணத்தை கையாளும் முன் கைகளை கழுவ வேண்டும் என்று  டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் நுண்ணுயிரி ஆய்வாளர் டாக்டர் நந்தினி டுகால் தெரிவித்துள்ளார். 

Next Story