கர்நாடகாவில் காங்கிரஸ் ஊர்வலத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு
கர்நாடகாவில் உள்ள தும்கூரில் காங்கிரஸ் ஊர்வலத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்,
கர்நாடகாவில் உள்ளாட்சித்தேர்தலையொட்டி தும்கூரில் காங்கிரஸ் வேட்பாளர் இணையத்துல்லா கான் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஊர்வலத்தின் போது மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பியோடி விட்டனர். ஆசிட் வீச்சில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story