பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்
பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் அடைந்தார்.
பெங்களூரு,
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா. இவருடைய மனைவி கலாவதி(வயது72). இவர்கள் பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள பிரதாப் லே-அவுட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். வயது முதிர்வு காரணமாக கலாவதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு கலாவதி மரணம் அடைந்தார். அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலையில் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ஆகியோருடன் சத்தியநாராயணாவின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலாவதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story