ஐதராபாத்தின் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்கம் டிபன் பாக்ஸ்-மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு


ஐதராபாத்தின் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்கம் டிபன் பாக்ஸ்-மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 Sept 2018 12:20 PM IST (Updated: 4 Sept 2018 12:41 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தின் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்கம் டிபன் பாக்ஸ் மற்றும் மதிப்புமிக்க கலைப்பொருட்கள் திருடப்பட்டு உள்ளது.


ஐதராபாத்

தெலுங்கானாவின் ஐதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்க டிபன் பாக்ஸ் , தங்க கப்பன் சாஸர்,ஆகியவை திருடப்பட்டு உள்ளது . இந்த சம்பவம் திங்கட்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது.

ஐதராபாத்  நிஜாம் அருங்காட்சியகம்  நிஜாமின் அரண்மனை பழைய நகர ஹைதராபாத்தில் புருனி ஹவேலியில் அமைந்துள்ளது. இது மீர் சவுக்  போலீஸ் நிலைய எல்லைக்குள் இந்த அரண்மனை அமைந்து உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டிபன்பாக்ஸ்  2 கிலோ இருக்கும்.  கப், தட்டு மற்றும் ஸ்பூன் ஆகியவை   வைரம் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்டதாகும். நிஜாம் குடும்பத்தால் நடத்தப்படும்  நிஜாம் டிரஸ்ட்டால்  2000 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இது நகரத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.


Next Story