கணவரை சிக்க வைக்க இறந்து விட்டதாக போலீசில் புகார், வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண் கைது


கணவரை சிக்க வைக்க இறந்து விட்டதாக போலீசில் புகார், வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண் கைது
x
தினத்தந்தி 4 Sept 2018 3:06 PM IST (Updated: 4 Sept 2018 3:06 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் கணவரை போலீசிடம் சிக்க வைக்க அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ராகுல் என்ற இளைஞருக்கும் ரூபி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் ரூபியின் தந்தை ஹரிபிரசாத் காவல்நிலையத்துக்கு வந்து, தனது மகள் ரூபியை ராகுலும் அவர் பெற்றோரும் வரதட்சணை கொடுமை செய்து கொன்றுவிட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் உயிரிழந்ததாக கூறப்பட்ட ரூபியின் சடலத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ரூபியின் பேஸ்புக் பக்கம் ஆக்டிவாக இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்ததை அவர்கள் கண்காணித்தனர்.

இதன் மூலம் ரூபியின் போன் நம்பரை கண்டுப்பிடித்து போலீசார் கண்காணித்தபோது, ரூபி இறக்காமல் உயிரோடு இருப்பது தெரியவந்தது. மேலும், ராமு என்பவருடன் ரூபிக்கு தொடர்பு இருந்ததும் அவருடன் ரூபி வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேண்டுமென்றே கணவரையும், குடும்பத்தாரையும் மாட்டிவிட தான் இறந்ததாக நாடகமாடிய ரூபியையும், ராமுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். ரூபி தந்தை ஹரிபிரசாத் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story