டெல்லியில் திருட முயற்சி செய்ததாக 16 வயது சிறுவன் அடித்துக் கொலை


டெல்லியில் திருட முயற்சி செய்ததாக 16 வயது சிறுவன் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 4 Sept 2018 4:01 PM IST (Updated: 4 Sept 2018 4:01 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் திருட முயற்சி செய்ததாக 16 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதுள்ளது.


புதுடெல்லி,


 டெல்லியின் முகந்த்பூர் பகுதியில் இன்று அதிகாலையில் வீடு ஒன்றுக்குள் குதித்து 16 வயது சிறுவன் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்ததாக தாக்கப்பட்டுள்ளான். சிறுவனை வீட்டின் உரிமையாளர் பிடித்ததும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதனால் சிறுவன் உயிரிழந்தான் என போலீஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் டெல்லி போலீஸ் 3 பேரை கைது செய்துள்ளது. 

Next Story