தேசிய செய்திகள்

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது : காங்கிரஸ் பாய்ச்சல் + "||" + There is an unannounced emergency in the country Congress Flow

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது : காங்கிரஸ் பாய்ச்சல்

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது : காங்கிரஸ் பாய்ச்சல்
மாணவி சோபியா கைது விவகாரத்தில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’’ என்றும் குறிப்பிட்டார்.



தொடர்புடைய செய்திகள்

1. மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்
பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் மீது புகார் கொடுத்ததையடுத்து தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தைக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
2. கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சி
கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. பாரிக்கர் உடல்நலம் பாதிப்பு; கோவாவில் ஆட்சி அமைக்க கோருகிறது காங்கிரஸ் கட்சி
கோவாவில் முதல் மந்திரி பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஆட்சி அமைக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளுநரை அணுகியுள்ளது.
4. மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்
மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
5. மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை : பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக தந்தைக்கு போலீஸ் சம்மன்
மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை. சோபியாவின் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக அவரது தந்தைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.