தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார் + "||" + Supreme Court Chief Justice Ranjan Gogoi takes office next month

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தற்போது தீபக் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் அடுத்த மாதம்(அக்டோபர்) 2–ந்தேதியுடன் நிறைவடைகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டுக்கு இதனால் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படவேண்டும்.

தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து தலைமை நீதிபதியாக வரக்கூடிய மூத்த நீதிபதி குறித்து முறைப்படி பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும் என்பது மரபு வழியாக உள்ளது.

அதன்படி தீபக் மிஸ்ரா, அடுத்த தலைமை நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை நியமிக்க பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை சட்ட அமைச்சகத்துக்கு நேற்று அனுப்பினார். இக்கடிதத்தை அந்த அமைச்சகம் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லும். பிரதமர், இது தொடர்பாக தனது கருத்தை ஜனாதிபதிக்கு தெரிவிப்பார். இதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் பற்றிய அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார்.

தீபக் மிஸ்ராவின் பதவி காலம் அக்டோபர் 2–ந்தேதியுடன் நிறைவு பெறுவதால் ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அடுத்த மாதம்(அக்டோபர்) 3–ந்தேதி பதவி ஏற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு
பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
2. இந்திய விமானப்படை விமான விபத்துகளை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
கடந்த 1–ந் தேதி, இந்திய விமானப்படையின் மிராஜ்–2000 என்ற பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி, 2 விமானிகளும் பலியானார்கள்.
3. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ‘ஸ்டெர்லைட் தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ ஆலை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஸ்டெர்லைட் தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆலை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
4. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் ஊழல் கட்சிகள் என தெரிந்துள்ளது; யெச்சூரி
சிட்பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டும் ஊழல் கட்சிகளென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் தெரிய வந்துள்ளது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
5. பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார்.