மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்


மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 5 Sep 2018 6:29 AM GMT (Updated: 5 Sep 2018 6:29 AM GMT)

மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி

கேரள எழுத்தாளர் எஸ்.ஹரேஷ்  எழுதிய நாவல் மீஷா. இந்த நாவல்  பெண்கள் மற்றும் இந்துமதத்தை அவமதித்ததாக கூறப்பட்டது. இதனால்  சர்ச்சை எழுந்தது.

மீஷா தொடராக மாத்ரு பூமி  செய்தி  பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. ஹிந்துத்துவ அமைப்புகளின் அச்சுறுத்தலால்  இந்த ஆண்டு ஜூலையில் எஸ்.ஹரேஷ் தனது நாவலான மீஷாவைத் திரும்பப் பெற முடிவு செய்தார். 

என் நாவலைத் திரும்பப் பெற நான் முடிவு செய்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு மற்றும் என் குடும்பத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் வருகின்றன. நான் இந்த நாவலுக்காக  ஐந்து ஆண்டுகள் வேலை செய்து உள்ளேன் என கூறினார். 

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில்  ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில்  ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் முதலில் நாவலை முற்றிலும் தடை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பின்னர்,  குற்றச்சாட்டிற்குரிய  பகுதிகளை மட்டும் நீக்க உத்தரவிடும்படி  கேட்டார்.

இந்த மனுவை  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உள்ளது.

தங்களது கற்பனையில்  தோன்றுவதை  எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதுவதை அனுமதிக்க வேண்டும். எழுத்தாளர்களின் கற்பனை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என யாராலும் கட்டமைத்து கூற முடியாது  என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

Next Story