தேசிய செய்திகள்

கைது செய்யப்பட்ட 5 பேரும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு உறுப்பினர்கள் -மகாராஷ்டிரா போலீஸ் + "||" + Activists arrest: Maha police files affidavit in SC, says action because they are members of banned CPI (Maoist)

கைது செய்யப்பட்ட 5 பேரும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு உறுப்பினர்கள் -மகாராஷ்டிரா போலீஸ்

கைது செய்யப்பட்ட 5 பேரும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு உறுப்பினர்கள் -மகாராஷ்டிரா போலீஸ்
கைது செய்யபட்ட 5 பேரும் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மாவோயிஸ்டு) உறுப்பினர்கள் என மகாராஷ்டிரா போலீஸ் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவுட் தாக்கல் செய்து உள்ளது.
மும்பை

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் 5 மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வரவரா ராவ், வெர்னான் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, சுதா பாரத்வாஜ் மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோர் ஆகஸ்ட் 26 ந்தேதி  கைது செய்யப்பட்டனர். இதில் மும்பையை சேர்ந்தவர்கள் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மறுநாள் சுப்ரீம் கோர்ட் தலையீட்டிற்கு பின் அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.  

இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கைது செய்யப்பட்டு உள்ள 5 பேரும்   தடைசெய்யப்பட்ட சிபிஐ ( மாவோயிஸ்டு)  உறுப்பினர்கள் என மகாராஷ்டிரா போலீஸ் சுப்ரீம் கோர்ட்டில்  அபிடவுட் தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து 21 பக்கத்தில் பதில் அளித்துள்ளது மாநில அரசு.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த தேதி முதல் தீவிர விசாரணையில் அவர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்றங்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுகின்றன. இந்த மரியாதைக்குரிய நீதிமன்றம் கீழ்க்கண்ட உண்மைகளிலிருந்து திருப்திப்படுத்தப்படும்.

கைது செய்யப்பட்டவர்கள்  தடை செய்யபட்ட பயங்கரவாத அமைப்பின் செயலாக்க உறுப்பினர்களாக இருந்து உள்ளனர். தடை செய்யப்பட்ட அந்த அமைப்பின் பெயர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மாவோயிஸ்ட்) ஆகும்.

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா  (மாவோயிஸ்டுகள்) இவர்கள்  வன்முறைக்குத் திட்டமிட்டு, தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல், பெரிய அளவிலான வன்முறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

2009-ல் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மாவோயிஸ்ட்) தயாரித்த நிகழ்ச்சி நிரலின் படி சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பொது சொத்துக்ளை அழித்து உள்ளது.

மேலும் தலைமறைவாக இருந்த  ஒருவரை கைது செய்தபோது  அவர் அளித்த வாக்குமூலத்தில் எல்கார் பரிஷத் என்ற அமைப்பின் கீழ் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது ஒரு பகுதியாகும். "எல்கார்" என்பது "தாக்குதல்" என்று பொருள்படும் "யல்காரின்" சிதைந்த பதிப்பு ஆகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.