55 லட்சம் ரொக்கம்- ரூ10.லட்சம் நகை வரதட்சணை வாங்கி மனைவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்
55 லட்சம் ரொக்கம்- ரூ10.லட்சம் நகை வரதட்சணையாக வாங்கி கொண்டு மனைவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மீது பெற்றோருடன் பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
கர்னூல்
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திரிவேணி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திரிவேணி, தனது பெற்றோருடன் ராயதுர்கம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், திருமணத்தின்போது 45 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், திருமண செலவிற்காக 10 லட்சம் என் வீட்டில் இருந்து கொடுத்தார்கள். திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். என்னை கட்டாயப்படுத்தி துன்புறுத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்.
தினமும் என்னை கொடுமைப்படுத்தினார். திருமணம் ஆகி அடுத்தவர்கள் வீட்டுக்கு சென்றிருந்ததால் பயத்தில் இதனை அவர்களது வீட்டிலும் நான் தெரிவிக்கவில்லை. எங்களது பெற்றோர் கவலைப்படுவார்கள் என்று அவர்களிடமும் தெரிவிக்கவில்லை. தினம் தினம் கொடுமைப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நான், மாமனார் மாமியார் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்கள் மகனுக்கு ஆதரவாகவே பேசினர்.திடீரென்று ஒரு நாள் என்னிடம், நீ காசநோயாளி என்பதால் உன்னை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு சம்மதித்து கையெழுத்து போடும்படி மிரட்டினார்கள். இதற்கு பிறகுதான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு, இங்கு நடக்கும் கொடுமைகளை சொன்னேன். அவர்கள் மிகவும் வருத்த்பட்டனர். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப்போடவில்லை என்றால், நிர்வாணப் படங்களை, வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்கள்.
நான் காசநோயாளி இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனையில் பரிசோத்து அந்த மருத்துவமனையின் அறிக்கையையும் காண்பித்தேன். இருப்பினும் எனது கணவன் கொடுமைப்படுத்தினார். திருமணத்திற்கே தகுதியற்றவள் என கூறிய என் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆகவே திருமணத்தின்போது நாங்கள் வழங்கிய 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, எனது படிப்பு சான்றிதழ்களை பெற்றுத் தரும்படி கேட்டு புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story