தேசிய செய்திகள்

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம் + "||" + Modi government to buy 18 bullet trains from Japan for Rs 7,000 crore: Report

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம்

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில்  ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம்
மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரெயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி

ரூ.7 ஆயிரம் கோடியில்  ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரெயில்களை வாங்க  மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. . மேலும் உள்ளூர் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மாற்றுவதில் புல்லட் ரெயில் ஒப்பந்தமும் அடங்கும்.

ஜப்பானில் இருந்து 18 ஷிங்கன்சன் ரெயில் பெட்டிகளை நாங்கள்வாங்க உள்ளோம் , "என  மத்திய அரசு அதிகாரி  ஒருவர் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு  தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புல்லட் ரெயிலுக்கும் 10 பெட்டிகள் இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய புல்லட் ரெயில்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

பொது தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையில் இந்திய ரெயில்வே இந்தியாவில் ஒரு புல்லட் ரெயிலைக் ஒருங்கிணைக்கும் வசதியை அமைக்கும் பணியை தொடங்கி விட்டது என தெரிவிக்கபட்டு உள்ளது. கவாசாகி மற்றும் ஹிட்டாச்சி போன்ற ஜப்பானிய ரயில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டில் வசதிகளை ஏற்படுத்தும் என அதில் அவர் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
2. மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
3. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை மூலமாக கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.