தேசிய செய்திகள்

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம் + "||" + Schools cannot deny admission for lack of Aadhaar card says UIDAI

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம்

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம்
ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. #Aadhaar #UIDAI
புதுடெல்லி,

ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. #Aadhaar  #UIDAI

பள்ளிகள் ஆதார் இல்லையென்று மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது, அவ்வாறு மறுத்தால் அது தவறானது மற்றும் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது கிடையாது என ஆதார் ஆணையம் தெரிவித்தது.
 
மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகள் ஆதாரை கேட்கும் நிலையில் இந்த உத்தரவு மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதியாக அமைந்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு ஆதார் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆதார் இல்லையென்று சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுத்து விடுகின்றன. ஆதார் அட்டை இல்லை என்பதைக் கூறி மாணவர் சேர்க்கையை மறுக்கக்கூடாது. சட்டப்படி அது தவறானது மற்றும் அந்த செயல் செல்லாது. மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும் வரையில் மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம். பள்ளிகள், உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், மாநில கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம். அதன்மூலம் ஆதார் அட்டையை பெறுவது, தவறுகளை நீக்கி சரியான ஆதார் அட்டையைப் பெறுவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது. 

குழந்தைகளுக்கு ஆதார் இன்னும் வழங்கப்படவில்லை, அவர்களுடைய பயொமெட்ரிக் தகவல்கள் இன்னும் ஆணையத்தின் தகவல் தரவில் சேர்க்கப்படவில்லை என்றால், ஆதார் விதிகளின்படி அவர்களை சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆதார் அப்டேட் வசதிகளை செய்து கொடுப்பது பள்ளிகளின் பொறுப்பாகும் என ஆணையம் உறுதி செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 10, 12-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம்
10, 12-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
2. கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3. பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4. எங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை திரும்ப தாருங்கள் மோடி அவர்களே!
எங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை திரும்ப தாருங்கள் பிரதமர் மோடி அவர்களே என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
5. பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை
பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.