தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது + "||" + Supreme Court to deliver verdict on Section 377 tomorrow

ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது

ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது
ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தனது தீர்ப்பை வழங்குகிறது.
வயதுக்கு வந்த 2 நபர்கள் பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் என 2013-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இவ்வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

 கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.