தேசிய செய்திகள்

மத்திய மந்திரியுடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு + "||" + Minister Kamaraj Meets with the Union Minister

மத்திய மந்திரியுடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு

மத்திய மந்திரியுடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு
பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் காமராஜ் நேற்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மத்திய நுகர்பொருள் விவகாரங்கள், பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை, தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு துறை அமைச்சர் காமராஜ் புதுடெல்லி கிருஷி பவனில் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவினை நீட்டிப்பு செய்வது தொடர்பாக முதல்–அமைச்சர் அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் காமராஜ், மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, எம்.பி.க்கள் கோபால், விஜிலா சத்யானந்த், தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் முதன்மை உள்ளுறை ஆணையாளர் (தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி) என்.முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.