தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு + "||" + Section 377 Verdict By Supreme Court Today: 10-Point Guide

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையை குற்றமாக்குவதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி, 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை, இயற்கைக்கு மாறானது - ஆர்.எஸ்.எஸ்
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை எனவும் இயற்கைக்கு மாறானது எனவும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
2. பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
3. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது.
4. விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு
விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல என சுப்ரீம் கோர்ட்டில் பதில்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.