தேசிய செய்திகள்

எஸ்.சி/எஸ்.டி சட்ட விவகாரம்: நாடுதழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு + "||" + Visuals of #BharatBandh protest from Patna's Rajendra Nagar Terminal railway station

எஸ்.சி/எஸ்.டி சட்ட விவகாரம்: நாடுதழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு

எஸ்.சி/எஸ்.டி சட்ட விவகாரம்: நாடுதழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு
எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுடெல்லி,

எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. 

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில்,  எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. 

இந்த நிலையில், எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரயில் நிலையத்தில்  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மராட்டிய மாநிலத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாரத் பந்த்: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan
2. மகாராஷ்டிராவில் பாரத் பந்த்: ரெயில் போக்குவரத்து பாதிப்பு, 14 பேருந்துகள் சேதம்; 100 பேர் கைது
மகாராஷ்டிராவில் நடந்த பாரத் பந்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 14 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
3. வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி பாரத் பந்த்; பாரதீய ஜனதா
காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் ஆனது பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி என பாரதீய ஜனதா கூறியுள்ளது.
4. சட்டப்பிரிவு 35-ஏ விவகாரம்: காஷ்மீரில் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம்
சட்டப்பிரிவு 35-ஏ நீக்க எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
5. தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது சரியல்ல: சித்தராமையா சொல்கிறார்
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது சரியல்ல என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார். #CauveryIssue #Siddaramaiah