தேசிய செய்திகள்

ஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு + "||" + Section 377 Verdict: Concurring judgment, sustenance of identity is the pyramid of life - CJI

ஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஓரின சேர்க்கை  குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஓரின சேர்க்கை குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி, 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை  சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை தீபக் மிஸ்ரா வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஒவ்வொருவருக்கும்  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். யாரும் தங்கள் தனித்துவத்திலிருந்து தப்பிக்க முடியாது. சமூகம் தனித்துவத்திற்கான சிறந்தது. தற்போதைய வழக்கில்,  எங்களது  தீர்ப்புகள் பலவாறாக இருக்கும் ஆனால் முரண்பாடு இல்லை. அடையாளத்தைத் தக்கவைத்தல்  வாழ்க்கை பிரமிடாக உள்ளது. அரசியல் சாசன சம நிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவது இல்லை.

ஓரின சேர்க்கை  குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.  ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.