டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72-ஐ தாண்டியது


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 6 Sep 2018 8:27 AM GMT (Updated: 6 Sep 2018 8:27 AM GMT)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து ரூ.72.12 ஆக வர்த்தகம் ஆகிறது.

மும்பை,

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் ரூ. 71.75 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது இருந்தது.

இந்நிலையில் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் வீழ்ச்சியுடன் துவங்கியது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 7-வது நாளாகச் சரிந்து வருகிறது. இதனிடையே மதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து ரூ.72.12 ஆக வர்த்தகம் ஆகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றின் காரணமாக கடந்த ஆறு நாட்களில் ரூ.1.50 வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.62 , டீசல் விலை ரூ.75.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story