தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை கணவர், மாமனார் கைது + "||" + Woman killed for dowry in Muzaffarnagar; husband, father-in-law arrested

உத்தர பிரதேசம்: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை கணவர், மாமனார் கைது

உத்தர பிரதேசம்: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை கணவர், மாமனார் கைது
முசாபர்நகரில் வரதட்சணை கொடுமையால் பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர், மாமனார் போலீசார் கைது செய்தனர்.
முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஜோகியாகேத  என்ற கிராமத்தில் சமேய்தீன் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் நடைபெற்ற நாளில் இருந்தே புதுப்பெண்ணை கணவர் சமேய்தீன் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறப்பட்டது. அவரது கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்தநிலையில் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.