தேசிய செய்திகள்

மனைவி அழகாக இல்லை; அழகிய புகைப்படத்தை காட்டி திருமணம் புதுமாப்பிளை தற்கொலை + "||" + The wife is not beautiful;Weddings are beautiful Groom Suicide

மனைவி அழகாக இல்லை; அழகிய புகைப்படத்தை காட்டி திருமணம் புதுமாப்பிளை தற்கொலை

மனைவி அழகாக இல்லை; அழகிய புகைப்படத்தை  காட்டி திருமணம் புதுமாப்பிளை தற்கொலை
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மணமகள் அழகாக இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மைதீன்.இவருக்கு சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.ஆனால் திருமண நாள் மாலையில் இருந்தே மணமகன் மிகவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அதை அறிந்த மணமகனின் தாயார், என்ன காரணம் என தமது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மகனை சமாதானம் செய்த தாயார், மருமகளை அழைத்துக் கொண்டு தோல் நோய் மருத்துவர் ஒருவரை நாடி சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார். இருப்பினும் தமது மகன் மகிழ்ச்சியுடன் இல்லை என தாயாருக்கு தெரியவந்தது. இதனிடையே செவ்வாய் அன்று இரவு நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுமாப்பிள்ளையை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடிய குடும்பத்தினர், அவரது மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கேட்டு மணமகன் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 55 லட்சம் ரொக்கம்- ரூ10.லட்சம் நகை வரதட்சணை வாங்கி மனைவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்
55 லட்சம் ரொக்கம்- ரூ10.லட்சம் நகை வரதட்சணையாக வாங்கி கொண்டு மனைவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மீது பெற்றோருடன் பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
2. கடன் பிரச்சனையால் தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கே விற்பனை செய்த தம்பி
கடன் பிரச்சனையால் தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கே விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
3. வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி
ஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து என சொத்து குவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
4. சர்வாதிகார மனப்போக்குடன் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்? சந்திரபாபு நாயுடு கேள்வி
சர்வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்? என ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். #ChandrababuNaidu