தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு + "||" + A protest will be called on September 10 against this fuel loot by the Central Govt

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது.

கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.