ஜம்மு காஷ்மீர்: தலைமை போலீஸ் அதிகாரி திடீர் மாற்றம்


ஜம்மு காஷ்மீர்: தலைமை போலீஸ் அதிகாரி திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 7 Sep 2018 1:20 AM GMT (Updated: 7 Sep 2018 1:20 AM GMT)

ஜம்மு காஷ்மீரின் தலைமை போலீஸ் அதிகாரி எஸ்.பி வாய்ட், நேற்று இரவு திடீரெனெ அப்பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை தலைமை அதிகாரியாக பதவி வகித்து வந்த எஸ்பி.வாய்ட் நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் நேற்று சில உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக எஸ்பி வாய்டும் தலைமை போலீஸ் அதிகாரி பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில அரசுக்கும், போலீஸ் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து எஸ்பி வாய்டுக்கும், அண்மையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், இந்த பணிமாற்றம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன், காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களை பயங்கரவாதிகள் பிடித்துச்சென்றனர். காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்காக, விசாரணைக்கு அழைத்து வந்த பயங்கரவாதிகளின் உறவினர்களை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த விவகாரத்தில், அரசுக்கும் காவல்துறை தலைமை அதிகாரிக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வாரம், தெற்கு காஷ்மீரில் மூன்று போலீசார் மற்றும் காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை பயங்கரவாதிகள் பிடித்துச்சென்றனர். இதையடுத்து, அவர்களை விடுவிப்பதற்காக, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் எந்த கெடுபிடியும் இன்றி உடனடியாக விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்களில் ஹிஸ்புல் முஜாகிதின் தளபதி ரியாஸ் நைகூ-வின் தந்தையும் அடங்குவார். 


Next Story