தேசிய செய்திகள்

பாஜக எம்.எல்.ஏ வின் நாக்கை அறுத்தால் ரூ.5 லட்சம் தருகிறேன்: முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு + "||" + Chop off BJP MLA Ram Kadam's tongue, will give Rs 5 lakh: Ex-Maharashtra minister Suboodjh Savji

பாஜக எம்.எல்.ஏ வின் நாக்கை அறுத்தால் ரூ.5 லட்சம் தருகிறேன்: முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாஜக எம்.எல்.ஏ வின் நாக்கை அறுத்தால் ரூ.5 லட்சம் தருகிறேன்: முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு
இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமின் நாக்கை அறுத்தால் ரூ.5 லட்சம் தருகிறேன் என முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சுபோத் சாவ்ஜி கூறியுள்ளார். #SubodhSavji
மும்பை, 

மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்காக தனது செல்போன் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி நம்பரையும் கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே ராம் கதமின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சுபோத் சாவ்ஜி கூறுகையில்,

”இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஒரு எம்.எல்.ஏ. விடமிருந்து இது போன்ற விஷயங்கள் வெளிவருவது முறையல்ல. இவ்வாறு பேசிய எம்.எல்.ஏ. ராம் கதமின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ. 5 லட்சத்தை நான் அளிக்கிறேன்” எனக் கூறினார்

இந்தநிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை