பாலியல் வன்கொடுமை வழக்கு: நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்


பாலியல் வன்கொடுமை வழக்கு: நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
x
தினத்தந்தி 7 Sep 2018 5:41 AM GMT (Updated: 7 Sep 2018 5:41 AM GMT)

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Nithyananda

பெங்களூர்

நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று
வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு, நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

நித்யானந்தா வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை எனவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை நீதிபதி ஏற்க மறுத்தார். தொடர்ந்து 3ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாததால், நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு
ஒத்திவைத்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story