தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி + "||" + Senior officials have reached the spot and injured have been admitted to hospital for treatment, the official added.

உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #UPAccident
அல்மோரா,

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோஹன்ரி அருகேயுள்ள பாட்ரோஜ்கான் - பிஹிகியாசன் மலைப்பாதையில் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி திடீரென 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 30 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து கவிந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்ஹ்வால் மோட்டார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 30 பேர் ராம் நகரிலிருந்து காரிசன் பகுதியை நோக்கி செல்கையில் பாட்ரோஜ்கான் - மோஹன்ரி மலைப்பகுதியில் 50 அடி ஆழத்திற்க்கு பஸ் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது என கூறினார்.

இதனிடையே காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரனை செய்து வருகிறனர்.