தேசிய செய்திகள்

கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ. ஒரே நாளில் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்ததாக ராகுல் டுவிட்டரில் தகவல் + "||" + Rahul Gandhi walked over 34 kms during Kailash yatra, lost 4500 calories in just one day

கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ. ஒரே நாளில் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்ததாக ராகுல் டுவிட்டரில் தகவல்

கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ. ஒரே நாளில் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்ததாக ராகுல் டுவிட்டரில் தகவல்
கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ தூரம் ஒரே நாளில் நடந்ததால் 4.500 கலோரிகளை இழந்ததாக ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். RahulGandhi
புதுடெல்லி,

கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  கடந்த சில தினங்களுக்கு முன் மானசரோவர் பகுதியில் தங்கி  அங்குள்ள மானசரோவர் ஏரியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  

அதில், மானசரோவர் ஏறி மிகவும் மென்மையானது சாந்தம் மற்றும் அமைதியாக உள்ளது. அது எல்லா வற்றையும் கொடுத்து தன்னை இழக்கிறது. இந்த ஏரியில் இருந்து  எவரும் நீர்  எடுத்து  குடிக்கலாம். அதில் வெறுப்பு காட்டுவது கிடையாது. அதனால்தான்  இந்தியாவில் நாம் இந்த  நீர்நிலையை வணங்குகிறோம். என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரம் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரம் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்துள்ளேன். வெறுப்பவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளிவிட்டேன் உங்களால் வைத்திருக்க முடியுமா? என கூறியுள்ளார்.