தேசிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ் + "||" + 2 terrorists with ISIS links arrested near Red Fort, says Delhi Police

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்
டெல்லி செங்கோட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக டிஜிபி (சிறப்பு பிரிவு) செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் செங்கோட்டை அருகே ஜும்மா மசுதி பஸ் நிலையத்தில் நேற்று இரவு இரு பயங்கரவாதிகளை கைது செய்தது. 

அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அவர்கள் உ.பி.யிலிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளனர். காஷ்மீர் செல்லும் வழியில் டெல்லிக்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பர்வேஸ், ஜாம்செட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஜேகே பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். பர்வேசின் சகோதரர் கடந்த ஜனவரியில் ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். அவர்களுடைய இலக்கு டெல்லி கிடையாது. அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம், போலீஸ் காவலில் எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலி
திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலியானார்.
2. தாராசுரம் கோவில் வளாகத்தில் காதலர்களுக்கு வாள் வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை மர்ம நபர் வாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது
கட்டுப்பாட்டை டெல்லி மக்கள் நேற்று இரவு நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததால், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது.
4. போலீஸ் ஆவணங்களை கேட்டதால் பைக்கை தீ வைத்து எரித்த பால்காரர்!
போலீஸ் ஆவணங்களை கேட்டதால் பைக்கை பால்காரர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு
தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.