தேசிய செய்திகள்

பிரியாணியால் கணவனை விட்டு சென்ற மனைவி பதறிப்போன கணவர் + "||" + Karnataka Unable to bear biryani smell, pregnant woman leaves husband

பிரியாணியால் கணவனை விட்டு சென்ற மனைவி பதறிப்போன கணவர்

பிரியாணியால் கணவனை விட்டு சென்ற மனைவி பதறிப்போன கணவர்
பிரியாணி வாசனை பிடிக்காததால், கர்ப்பிணி மனைவி தனது கணவரை விட்டு பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெங்களூர், 

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி ராஜூ சர்கார் மற்றும் அனிதா. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூரூ அடுத்த கம்மகொண்டன ஹள்ளியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ராஜூ ஆசையோடு பிரியாணி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அபோது மனைவி முன்னிலையில், மகனுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட ஆரம்பித்துள்ளார். 6 மாத கர்ப்பிணியான அனிதாவிற்கு பிரியாணி வாசனை என்றாலே பிடிக்காதாம்.  இதனால் சண்டையிட்டு படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு சாப்பிடாமால் கணவருடன் சண்டையிட்டு உறங்க சென்று விட்டார். மறுநாள் காலை வழக்கம் போல் ராஜூ வேலைக்கு சென்று விட்டார்.

இந்த சூழலில் அனிதா, வீட்டில் இருந்த ரூ 12,000 பணம் துணை மணிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் ராஜூ மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மற்றும் வீட்டில் மனைவியின் உடைகள் மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு பதறிப்போனார்.  கடந்த 2 நாட்களாக மனைவியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்துள்ளார் இருந்தாலும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதனைதொடர்ந்து மனைவியை காணவில்லை என்று கங்கம்மானா குடி போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அனிதா தனது சொந்த ஊரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து  சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி கணவன் - மனைவியை போலீசார் ஒன்று சேர்த்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...