தேசிய செய்திகள்

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி + "||" + Militant killed, policeman injured in attack on police picket in JK

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மீது நடந்த துப்பாக்கி சூடுக்கு பதிலடியாக தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு அவர்கள் மீது தீவிரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  அவனிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிரவாதியின் அடையாளம் மற்றும் எந்த குழுவை சேர்ந்தவன் ஆகியவை பற்றி போலீசார் உறுதியான தகவலை வெளியிடவில்லை.  இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவரும் காயமடைந்து உள்ளார்.  அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.


தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி சூடு; 17 பேர் பலி
நைஜீரியாவின் வடக்கே துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
2. பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்
பிரான்சில் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் 3 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளார்.
3. பிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
பிரேசில் நாட்டில் சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
4. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
5. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.