தேசிய செய்திகள்

டெல்லியில் ₹.80ஐ தொட்டது பெட்ரோல் விலை; மும்பையில் ₹.87.77க்கு விற்பனை + "||" + Petrol reaches beyond Rs 80 p/l in Delhi; costliest in Mumbai at Rs 87.77/L

டெல்லியில் ₹.80ஐ தொட்டது பெட்ரோல் விலை; மும்பையில் ₹.87.77க்கு விற்பனை

டெல்லியில் ₹.80ஐ தொட்டது பெட்ரோல் விலை; மும்பையில் ₹.87.77க்கு விற்பனை
டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ₹.80ஐ தொட்டுள்ளது. மும்பையில் அதிக அளவாக ₹.87.77க்கு விற்கப்படுகிறது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதனால் தினந்தோறும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ₹.80 ஐ தொட்டுள்ளது.  பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றிற்கு 39 பைசாக்கள் உயர்ந்து ₹.80.38 ஆக இன்று விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ₹.72.07 என்ற நேற்றைய விலையை விட 44 பைசாக்கள் உயர்ந்து ₹.72.51 ஆக விற்கப்படுகிறது.  இத்தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ₹.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.  இது இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படும் நகரம் என்ற வரிசையில் வருகிறது.  டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 47 பைசாக்கள் உயர்ந்து ₹.76.98 ஆக விற்கப்படுகிறது.

நாட்டில் இந்த விலை உயர்வுக்கு பெருமளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கலால் வரி உயர்வு ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து ரூ.71.41க்கு விற்பனையாகிறது.
2. சென்னையில் பெட்ரோல் ரூ.71.62க்கு இன்று விற்பனை
சென்னையில் பெட்ரோல் ரூ.71.62க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
3. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல் விலை 7 காசுகள் குறைவு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
5. இந்த ஆண்டில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை ரூ.72.48 22 காசு குறைந்தது
நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த ஆண்டின் 4–வது காலாண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.86 பைசாவாக விற்பனையாகிறது. இதுதான் இந்த ஆண்டில் குறைவான விலையாகும். இதேபோன்று நாட்டின் முக்கிய நகரங்களில் 20 முதல் 22 பைசா பெட்ரோல் விலை குறைந்து உள்ளது.