கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு யோகி உத்தரவு


கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு  யோகி உத்தரவு
x
தினத்தந்தி 8 Sep 2018 9:15 AM GMT (Updated: 8 Sep 2018 9:15 AM GMT)

கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.  உணவு பொருட்களில் கலப்படம் தொடர்புடைய அனைத்து வழக்குகளின் விசாரணையையும் வேகமுடன் நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.

நீண்ட காலத்திற்கு முடிக்காமல் உள்ள வழக்குகளால் உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் ஊழல் ஊக்குவிக்கப்படுகின்றன என ஆய்வில் அவருக்கு தெரிய வந்துள்ளது.

அவர் தொடர்ந்து, மருந்து உரிமத்திற்கு அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.  உரிமம் வழங்கும் முறையானது வலிமையுடனும் மற்றும் வெளிப்படை தன்மையை பராமரிக்கும் முறையிலும் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


Next Story