பெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு சொல்கிறார்


பெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு சொல்கிறார்
x
தினத்தந்தி 8 Sep 2018 2:34 PM GMT (Updated: 8 Sep 2018 2:34 PM GMT)

பெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.

இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி திங்கட்கிழமைநாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  டெல்லியில் நடந்த பசுமை எரிபொருள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, ”பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்சினை 45 ஆண்டு கால பிரச்சினை என்று தெரிவித்தார். மேலும் சுரேஷ் பிரபு கூறும் போது, "எண்ணெய் விலை உயர்வு விவகாரம் 45 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக உருவெடுத்தது. அந்தவகையில் இது 45 ஆண்டுகால பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையை சமாளிக்க எரிபொருள் ஆதாரத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சிந்தித்து இருக்க வேண்டும்” என்றார். 


Next Story