ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:  மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
x
தினத்தந்தி 8 Sep 2018 2:58 PM GMT (Updated: 8 Sep 2018 2:58 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பற்றி மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.  அதில், “அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மாசு காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 
 
எனவே, தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது. மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 


Next Story