இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சிரியா பயணம் ஒத்திவைப்பு


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சிரியா பயணம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 9 Sep 2018 1:21 AM GMT (Updated: 9 Sep 2018 1:21 AM GMT)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சிரியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SushmaSwaraj

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சிரியா பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், 

சிரியா நாட்டில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிரிய நாட்டுடன் பரஸ்பர ஆலோசனையில் ஈடுபட்டு சுவராஜின் பயணம் குறித்த புதிய தேதிகள் உறுதி செய்யப்படும் எனக் கூறினார்.

முன்னதாக ஊடக அறிக்கையின் படி, செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிரிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் வாலித் அல் மெளலேமுடன் இணை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story