கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சித்த கேரளா எம்.எல்.ஏ.விற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்


கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சித்த கேரளா எம்.எல்.ஏ.விற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:52 AM GMT (Updated: 9 Sep 2018 11:52 AM GMT)

கேரளாவில் கன்னியாஸ்திரியை விபசாரி என்ற கேரளா எம்.எல்.ஏ.விற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோசமான கருத்துக்களை தெரிவித்தார். கன்னியாஸ்திரி விபசாரி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா?  

12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாகக் கூறுகிறார் என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ். 

இப்போது மோசமான விமர்சனத்தை முன்வைத்த பிசி ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அவமானக்கரமானது. பாதிரியாருக்கு எதிராக புகார் கூறிய பின்னர் கன்னியாஸ்திரி பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு தேவாலயங்களும் உதவி செய்யவில்லை. பெண்களுக்கு உதவுவார்கள் என்று பதவி அளித்த எம்எல்ஏக்கள் பெண்களை அவமதிக்கிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளோம். இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்,” என்று கூறியுள்ளார். 

Next Story