தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, மகா கூட்டணியும் தோற்கும் - பிரதமர் மோடி + "||" + Opposition parties full of lies, their grand alliance will fail PM Narendra Modi

எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, மகா கூட்டணியும் தோற்கும் - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, மகா கூட்டணியும் தோற்கும் - பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணி தோல்வியடையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால் விடுக்க இயலாதவை. எதிர்க்கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது, பிரச்சனைகளுக்காக கிடையாது என்று கூறியுள்ளார். 

ஆட்சியிலிருக்கும் போது தோல்வியை தழுவியவர்கள், எதிர்க்கட்சிகளாகவும் தோல்வியாளர்கள்தான் என விமர்சனம் செய்துள்ளார். 

“கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம், பொய்களுடன் போட்டியிட எங்களுக்கு தெரியாது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்,  எதிர்க்கட்சிகளால் அமைக்கப்படும் மகா கூட்டணியையும் பிரதமர் மோடி நிராகரித்துவிட்டார் என கூறியுள்ளார். “எதிர்க்கட்சிகளின் தலைவர் தெரியவில்லை, அவர்களுடைய நோக்கம் ஊழல்,” என கூறியுள்ளார் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசினார்.
2. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் : பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.
4. நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது -ராகுல் காந்தி
நாடு மக்களால் நடத்தப்படுகிறது. ஒரு மனிதரால் அல்ல என்பது கூட மோடிக்கு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. சத்தீஷ்கர் தேர்தல்: ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
சத்தீஷ்கர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.