கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: கிறிஸ்தவ அமைப்பினர் 2–வது நாளாக போராட்டம்


கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: கிறிஸ்தவ அமைப்பினர் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2018 9:22 PM GMT (Updated: 9 Sep 2018 9:22 PM GMT)

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் மறைமாவட்ட பி‌ஷப் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.

கொச்சி,

வைக்கம் போலீஸ் டி.எஸ்.பி.  இந்த புகாரின் பேரில்  விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது, விசாரணையை சீர்குலைக்கும் செயல் எனக்கூறி கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பு சார்பில் கொச்சியில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. போலீசாரை கண்டித்து நடந்த இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது.

எனினும் இந்த வழக்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கேரள போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை பூஞ்சார் எம்.எல்.ஏ. ஜார்ஜ் வெளியிட்டு இருந்தார். இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

அந்த எம்.எல்.ஏ.வுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுத இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கூறினார்.


Next Story