கொல்கத்தா மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை


கொல்கத்தா மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை
x
தினத்தந்தி 9 Sep 2018 9:25 PM GMT (Updated: 9 Sep 2018 9:25 PM GMT)

மேற்குவங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சீருடை மற்றும் காலணி (ஷூ) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தா,

தற்போது மாணவ–மாணவிகளுக்கு குடை மற்றும் மழைக்கால கவச ஆடை (ரெயின்கோட்) வழங்க கொல்கத்தா மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நகராட்சி பள்ளி கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மாநகராட்சியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மாணவர்களுக்கென சொந்தமாக குடை இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு சரியாக வரமுடியாமல் போய்விடுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் குடைகள் மழைக்காலம் மட்டும் இன்றி கோடை காலத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story