தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Suicide by drinking poison in Uttar Pradesh Police Superintendent

உத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை

உத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் (வயது 30) கான்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

லக்னோ,

குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலுக்கு உள்ளான சுரேந்திர குமார் தாஸ், கடந்த 5–ந்தேதி வி‌ஷம் குடித்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சுரேந்திர குமார் தாஸ் பரிதாபமாக இறந்தார். அவருடைய மறைவுக்கு முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதே போல் போலீஸ் உயர் அதிகாரிகளும், சுரேந்திர குமார் தாஸ் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தனர்.