தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார் : வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேல் + "||" + Harikhi Patel is fasting at home

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார் : வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேல்

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார் : வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேல்
ஹர்திக் படேல் கடந்த மாதம் 25–ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல் கடந்த மாதம் 25–ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். 14–வது நாளான கடந்த 7–ந் தேதி, அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். நேராக அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 16–வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

ஹர்திக் படேலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதற்கிடையே, தனக்கு ஒரு போலீஸ் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக ஹர்திக் படேல் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேரும்,, வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.
2. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு பகுதியில் சுகாதார வளாகம் தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
3. அரசு ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை; பிரெஞ்சு மருத்துவ குழுவினர் அளித்தனர்
புதுவை அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு பிரெஞ்சு மருத்துவ குழுவினர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.
4. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேதமான தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேதமான தடுப்பு சுவரை சீரமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
5. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4 1/4 கோடி மதிப்பீட்டிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் தயார் நிலையில் இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.