தேசிய செய்திகள்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் + "||" + Tremors In Delhi After Mild Earthquake in Uttar Pradesh's Meerut

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. #DelhiEarthquake
புதுடெல்லி,

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.