தேசிய செய்திகள்

டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு + "||" + Delhi: 5 workers died while cleaning sewer

டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். #DelhiWorkers
புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியிலுள்ள மோதி நகர் பகுதியிலிருக்கும் டி.எல்.எஃப் அடுக்குமாடி குடியிருப்பில் 5 துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்  பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 3 பேர் டெல்லியிலுள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் நச்சு வாயு தாக்குதலால் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும் 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

இதனிடையே நச்சு வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து பாஜக கட்சியைச் சேர்ந்த பாரத் பூஷன் மாதன் கூறுகையில், டெல்லியில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஆம் ஆத்மி அரசாங்கம் தான் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்துவோம் என உறுதியளித்த இந்த அரசாங்கம், பல உயிரிழப்புகளுக்கு பின்னரும் பழைய நுட்பங்களையே உபயோகப்படுத்துகிறது எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்முவில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #JammuLandslide
2. உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #UPAccident